Wednesday, August 10, 2011

ஏகாதிபத்தியம் ஜெஹே !


விக்கிலீக்ஸ் இணையதளம் இராக் போரின் போது லட்சகணக்கான மக்கள் கொல்லப்பட்டதைப் பற்றிய இரகசிய தகவல்களைத் தொடர்ந்து பகிரங்கப்படுத்தியது. குவான்டனாமோ சிறை, அபுகிரை சிறைக் கொடுமைகள், நடுக் கடல் கப்பல்களில் போர்க் கைதிகளை அடைத்து வதைக்கும், மிதக்கும் சிறைச்சாலைகள் போன்ற அமெரிக்காவின் அத்து மீறல்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது. ஆனால், மனித உரிமை மீறல்கள் குறித்த இவ்வளவு தகவல்களையும் அமெரிக்கா பொருட்படுத்தவே இல்லை.


குறிப்பாக, போருக்கு சம்பந்தம் இல்லாத அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவது குறித்து, அமெரிக்கா அலட்டி கொள்வதே இல்லை. இது குறித்து எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான நோம் சாம்ஸ்கி எழுதிய வரிகள் இவை.

'தரையில் ஊர்ந்துகொண்டு இருக்கிற
எறும்புகளைக் கொல்வது
நமது நோக்கம் அல்ல;
ஆனால்,
நாம் நடக்கிறபோது
அவ்வாறு கொல்லப்படுகிற
எறும்புகளைப் பற்றி
நமக்கு அக்கறை கிடையாது
என்பதைப் போன்றது
இது'.

எறும்புகளுக்கும் மனித உயிர்களுக்குமான வித்தியாசங்கள் அழியும் காலமாகிவிட்டது. சாம்ஸ்கியின் இவ்வரிகள் உண்மையை உணர்த்த மட்டுமல்ல, இதயத்தை உலுக்கவும்தான் !"


தகவல் : கே.சாக்ரடீஸ், மதுரை.

(இவ்வரிகள் தன் சொந்த நாட்டு மக்களை அழிகின்ற எல்லா அரசுகளுக்கும் பொருந்தும்.)

0 comments:

Post a Comment