Thursday, August 11, 2011

பிரகாஷ் ஜா எனும் மனுதர்மன்.


மனுதர்ம இயக்குனர் பிரகாஷ் ஜா



இந்தி திரை உலகின் சமீபத்தில் பரபரப்புகுள்ளாகியிருக்கும் ஆராக்சான் பட இயக்குனர் பிராகஷ் ஜா. தமிழில் அடிதட்டு மக்களின் பணத்தில் தன் சம்பாதியத்தை நிரப்பிக் கொண்டு, அவர்களின் வாழ்வதாரத்தை கேலி செய்யும் கயவர்களான சங்கர், மணிரத்னம் போன்றோர் இருப்பதை போல வட நாட்டிலும் சில மனுதர்மவாதிகள் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க, கவனம் கொள்ளப்படவேண்டிய எதிரி இந்த பிரகாஷ் ஜா. இவருடைய எல்லா படங்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை.

இவருடைய கங்காஜல் திரைப்படம்தான் எனக்கு முதல் அறிமுகம். கதைக்களம் பிகார். பிகாரின் கிராமம் ஒன்றில் தாதாயிசம் செய்து கொண்டு இருக்கும் இரு நபர்களைப் (தந்தை-மகன்) பற்றிய கதை இது. பணி மாற்றம் காரணமாக அங்கு வரும் காவல் துறை அதிகாரி அஜய்தேவ்கான். இவர்களின் தாதாயிசம் கண்டு பொறுக்கமுடியாமல் அவர்களை எதிர்க்கிறார். தங்கள் இயலாமையை எப்போதுமே வெளிப்படுத்தும் அவ்வூர்மக்கள், தங்களின் சார்ப்பாக ஒர் காவல் துறை அதிகாரி கிடைக்க் பெற்றதில் மகிழ்ச்சியடைகின்றனர். கட்டக் கடைசியில், அந்த இரு தாதாகளின் அக்கிரமம் உச்சத்தை அடைய, காவல்துறை அதிகாரியின் துணையோடு, அவ்வூர்மக்களே அந்த தாதாக்களின் கண்களில் ஆசிட்டை விட்டு கண்களை குருடாக்கின்றனர். அந்த ஆசிட்டைதான் கங்காஜல், அதாவது கங்கை நீர் என்று பெயரிட்டு படத்தை முடித்திருப்பார், இயக்குனர் பிரகாஷ் ஜா. குறிப்பாக அப்படம் திரு.லாலுபிரசாத் யாதவையும், அவரின் கட்சியில் இருந்த, குற்றங்கள் அடிப்படையில் சிறையில் இருக்கும் பப்பு யாதவையும் மையப்படுத்தியே அப்படத்தை எடுத்திருப்பார். இவரைப் போன்ற பார்ப்பன அடிவருடிகளுக்கு, குற்றங்கள் அதிகமாக நடப்பது, குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த லாலுபிரசாத் மற்றும் மாயாவதி ஆளும் பிகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் என்று அடையாளப்படுத்தி அவர்களை கொடுங்கோலர்களாக சித்தரிப்பது தான் இவருடைய நோக்கம். இந்துத்துவ பயங்கரவாதி குஜராத்தில் நடந்த இனபடுகொலைகளும், அயோத்தியில் நடந்த மசூதி இடிப்பகளும், பஞ்சாப்பில் நடந்த சீக்கிய படுகொலைகளும் இயக்குனர் கண்களுக்கு தெரியாமல் போனாதா என்று தெரியவில்லை.


அடுத்து நான் கண்டது அவருடைய படமான அப்ஹாரன்(கடத்தல்). இதில் வில்லன் நானே பட்டேகர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வில்லன். இஸ்லாமியேனே வில்லனாகத்தான் பார்க்கப்படும்போது, இது அவர்களுக்கு லாஜிக் பிரச்சனையை கொடுக்காது. மக்கள் எல்லோரும் மதிக்கக்கூடிய ஒரு சுதந்திர போராட்டத் தியாகியும், ஊழலையும், அக்கிரமங்களையும் எதிர்க்கும் ஒருவர். அவரே, அம்மாநிலத்தின் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அளவு சக்தி படைத்தவர். அவருடயை மகன் அஜய் தேவ்கான். இவர்கள் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒரு கட்டத்தில், அரசாங்க வேலைக்கு தியாகியின் மகன் அஜய்தேவ்கான் முயல, அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதில் குறிப்பிட்ட காட்சியில் ஒரு உள்குத்துவைத்திருப்பார் இயக்குனர். என்னவென்றால், நாயகன் தன்னுடைய படிப்பு சான்றிதழ்களை கொண்டு பதிவு செய்து வைத்திருந்த அரசாங்க வேலையில் அவருடைய பெயர் பட்டியல் விடுப்பட்டு போயிருக்கும்.


(அப்ஹாரன் படத்திலிருந்து வில்லனாக இஸ்லாமிய கதை பாத்திரத்தில் நானே படேகாரும், பார்ப்பன கதை நாயகனாக அஜய்தேவ்கானும்.)


அக்காட்சியில், காவல் அதிகாரி ஒருவர் (கதநாயகனின் நண்பர்) அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரை பெயர் சொல்லி அழைப்பார். அப்பெயர் என்ன தெரியுமா ? 'மண்டல்'. ஆம், திரு.வி.பி.சிங் தலைமையில் இடஒதுக்கீடு ஏற்படுத்த வழிவகை செய்த மண்டல் கமிஷனின் மண்டல்தான் அப்பெயர். காவல்துறை அதிகாரி "மண்டல், இவர் யார் என்று தெரிகிறதா, நம் தியாகியின் மகன் தான் இவர். இவருடைய பெயர் பட்டியல் இருக்கிறதா என்று கேட்பார். அதற்கு அவர் பெயர் வரவில்லை. கோட்டா அடிப்படையில் நிறைய பேருக்கு ஒதுக்கியாகிவிட்டது. ஆதலால், எல்லா இடமும் பூர்த்தியாகிவிட்டது. நீங்கள் செல்லாம்" என்பார். இடஒதுக்கீட்டின் மூலம் வேலையை இழக்கும் ஒர் பார்ப்பனின் வருத்ததை பதிவு செய்திருப்பார். இன்று அரசு பட்டியலிட்டால், அரசின் மிக முக்கியமான அதிகார துறைகளில் பார்ப்பனர்களும், பனியாக்களும்தான் கோலேச்சியுள்ளனர். அதுபற்றி இயக்குனர்க்கு எந்த துப்பும் கிடைக்கவில்லையா என்பது தெரியவில்லை.


அடுத்த படம், ராஜ் நீதி. இதிலும் அவருடைய மனுதர்ம பார்வை படாமல் இல்லை. ஆம், பாண்டவர்கள்-கெளரவர்கள் பிரச்சனையை கையில் எடுத்திருப்பார்.கதநாயகன் என்றாலே, நல்லவன் தானே. கத நாயகனின் அண்ணனை கொலைசெய்திவிடுகிறார்கள் வில்லன்கள். வில்லன்கள் யார் என்று கேளுங்கள். தலித் தலைவனும், அவருடைய நண்பனும். கட்டக் கடைசியில், கத நாயகன் தர்மத்தை தன் நயவஞ்சகத்தால் நிலை நாட்டுவதுதான் (தலித் தலைவனையும், அவன் நண்பனையும் போட்டு தள்ளி) நிலைநாட்டுவதுதான் கதை. இதிலும் தலித் மக்களை கேவலப்படுத்தியிருப்பார்.இதில் தலித் தலைவனாக தன் விருப்பத்திற்குரிய நடிகர் அஜய்தேவ்கானையே தேர்ந்தெடுத்திருப்பார்.



(ராஜ் நீதி படத்திலிருந்து, தலித் தலைவராக அஜய்தேவ்கானும்,
நயவஞ்சக கதை நாயகனாக ரன்பீர் கபூரும்.)

தற்போது அவர் அவதாரம் எடுத்திருப்பது, ஆராக்சான் படத்தின் மூலம். ஆராக்சான் என்பதின் அர்த்தம் இடஒதுக்கீடு. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,சிறுபான்மையின மக்கள் இந்த புண்ணிய ? தேசத்தில் வதைப்பட்டுக் கொண்டிருக்க, பிற்படுத்தப்பட்டவருக்களுக்கான 27 சதவிதம் இவர் கண்ணை உறுத்தியிருக்கிறது. 100 சதவிதத்தில், பெரும் போராட்டத்திற்க்கு இடையே திரு.அர்ஜீன் சிங் தலைமையில் வெறும் 27 சதவித கல்வியில் இடஒதுக்கீடு கேட்டது. இவர்களுக்கு பொறுக்கவில்லை. 27% சதவித இடஒதுக்கீட்டின் மூலம் பாதிக்கப்படும் இவர்களுடைய பார்ப்பன மாணவர்களுக்கு ஆதரவாக இவர் களத்தில் இறக்கியிருக்கும் படமே "ஆராக்சான்" இளம் தலைமுறையினர், இவரைப் போன்ற மனுதர்மவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம் வரலாற்றை அபகரிக்கவும், தப்பும் தவறாகவும் எழுதுவதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதை நிருப்பிபோம்.

0 comments:

Post a Comment