Saturday, August 6, 2011

கலைமாமணி விருதுகளும் - நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்....


எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போது, நமக்கு விருதுகள் மீது மரியாதை குறையதான் செய்கிறது. ஆனால் அவற்றிலும் ஒருவர் தனித்து நிற்கிறார் என்றால் அது நடிகவேள் எம்.ஆர்.ராதாவைத் தவிர வேறு யாருமில்லை.

1966-ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கவர்னர் பரிசு அளிப்பதாக இருந்தது. கவர்னர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்.

'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பு இல்லை. என் படத்தையே பார்க்காத கவர்னர் எனக்குச் சிறந்த நடிகர் விருது கொடுப்பதை நான் விரும்பவில்லை', என்று நடிகவேள் எம்.ஆர்.ராதா அவ்விழாவுக்கே போகவில்லை. இத்தகைய சுயமரியாதை உள்ள கலைஞர்கள் இருந்தால், கலைமாமணியின் தரம் உயரும்.

தகவல் : தமிழரசன், கம்பம்

0 comments:

Post a Comment